நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இனிய இக்காலை

Iniya Ikkaalai

Moses Rajasekar

இனிய இக்காலை

விடிகின்ற வேளை

இனிய குரலில் நான் இயேசுவைப் பாடி

இசையினால் துதித்தூ மகிழும் இவ்வேளை

– இனிய

தூதரும் நானும் சேர்ந்து

துதித்துப் பாடும் இந்த வேளை – 2

நேயமாய் இயேசுவின் பாதம் – 2

அமர்ந்து நான் ஜெபிக்கும் வேளை

புதுக்காலை புதுக்கிருபை

புதுநன்மை கிடைக்கும் வேளை

– இனிய

வான் காண் பறவை எல்லாம்

வாழ்த்திப்பாடும் இந்த வேளை – 2

நீர் வாழ் உயிர்கள் எல்லாம் – 2

நீந்தி மகிழும் இவ்வேளை

புதுக்காலை புதுக்கிருபை

புதுநன்மை கிடைக்கும் வேளை

– இனிய

சிருஷ்டிகர் படைத்த எல்லாம்

சிரம் தாழ்த்திப் பணியும் இவ்வேளை – 2

குடும்பமாய் அமர்ந்து உம் பாதம் – 2

துதித்து நான் ஜெபிக்கும் வேளை

புதுக்காலை புதுக்கிருபை

புதுநன்மை கிடைக்கும் வேளை

– இனிய