நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இகபரமதிலே அகபரன் அவரை

Ikaparamathilae Akaparan Avarai

Moses Rajasekar

இகபரமதிலே அகபரன் அவரை

துதிக்க வைத்தால் ஸ்தோத்திரம்

அற்ப நாவிலே அற்புதர் அவரை

பாட வைத்தால் ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்– 4

பார்வோன் சேனையை கடலில் மூழ்கடித்த

தேவாதி தேவனைத் துதியுங்கள்

எரிகோ கோட்டையை இடித்து தகர்த்திய

ராஜாதி இராஜனைத் துதியுங்கள்

– அல்லேலூயா – 2

அக்கினி நடுவிலேயே உலாவி தம்மை

வெளிப்படுத்தினவரை துதியுங்கள்

தண்ணீரின் மேலே நடந்த அற்புதர்

இயேசுராஜனைத் துதியுங்கள்

வார்த்தையினாலே அகிலம் படைத்த

அநாதி தேவனை துதியுங்கள்

மண்ணினாலே மனிதனைப் படைத்த

மன்னாதி மன்னனைத் துதியுங்கள்

– அல்லேலூயா – 2