பாடல்
கீழாக்காமல் உன்னை மேலாக்கியே
Geelaakkaamal Unnai Maelaakkiyae
Joel Thomasraj
கீழாக்காமல் உன்னை மேலாக்கியே
உன்னை நான் அபிஷேகிப்பேன்
வாலாக்காமல் உன்னை தலையாக்கியே
புது நாமம் தந்திடுவேன்
எல்லையை பெரிதாக்கி விஸ்தரித்து
உன்னை நான் உயர்த்திடுவேன் (2)
மறவாமல் என்றும் நான்
உன்னோடிருந்து – தாயை போல்
பரிபாலிப்பேன் – உன்னை என்
கண்மணிபோல் நான் காத்து
புது நாமம் தந்திடுவேன்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கு உன்னை
காத்து – கண்ணிமையாய் காத்திடுவேன்
என் செட்டையின் கீழ் அடைக்கலப்படுத்தி
கோட்டையாய் காத்திடுவேன்
– மறவாமல்
பகலில் பறக்கும் அம்பிற்கு உன்னை
விடுவித்து காத்துக்கொள்வேன்
பொல்லாப்பு உனக்கு நேரிடாமல் பார்த்து
எல்லையை காத்திடுவேன்
– மறவாமல்