நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எத்தனை கோடி நன்மைகள்

Eththanai Koti Nanmaikal

Moses Rajasekar

எத்தனை கோடி நன்மைகள்

எந்தன் வாழ்வில் நீர் செய்ததை

எப்படிச் சொல்லிப் பாடுவேன் –

என் தேவா

உளையான பாவச் சேற்றில்

உழன்று கிடந்த என்னை

தூக்கிய விதம்தனை நினைத்தேன்

பாழான நிலத்தினிலும்

ஊளையிடும் குழிதனிலும்

கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டு

தாங்கி நடந்தின விதம்தனை நினைத்து

– எத்தனைக் கோடி

கனவீனமான என்னை

கனவானாய் மாற்றும்படி

கனமான சிலுவையை சுமந்தீர்

கலவாரி சிலுவையிலே இரத்தம்

சிந்தி எனை மீட்டு

நித்திய மகிமைக்கு முத்திரை தந்து

உத்தமரே உம் மகிமையை நினைத்து

– எத்தனைக் கோடி

ஒரு தந்தையைப் போல தோளின் மேலே

சுமந்து சென்றதைச் சொல்லவா

ஒரு தாயைப் போல மார்போடென்னை

அணைத்துக் கொண்டதைச் சொல்லவா – என்

கண்ணிரை மாற்றினதைச் சொல்லவா

கவலை மாற்றினதைச் சொல்லவா

எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும்

அத்தனை நாவுகள் உமை

துதித்தாலும் போதாது என் தேவா

அப்பா உம் கிருபையை எண்ணிப்

பாடுவேன் என் நாதா

– எத்தனை கோடி

சப்தஸ்வரங்கள் முழங்கட்டும்

மேள தாளங்கள் ஒலிக்கட்டும்

கீதவாத்தியங்கள் இசைக்கட்டும்

பரிசுத்தவான்கள் பாடட்டும்

பரலோக ராஜ்யம் திறக்கட்டும்

பரலோக ராஜ்யம் திறக்கட்டும்

– எத்தனைக் கோடி