பாடல்
எருசலேமே எருசலேமே நான்
Erusalaemae Erusalaemae Naan
Chandrasekaran
எருசலேமே எருசலேமே நான்
உன்னை எப்படி மறப்பேன்
உலகின் முத்தே உன்னதரின்
சொத்தே இரட்சகரை அருளினீரே
நான் உன்னை மறந்தால்
என் வலது கரம்
என் தொழிலை மறப்பது போல்
கர்த்தரின் கண்களும் இருதயமும்
எருசலேமே என்றும்
உன்னில் உள்ளதே
– எருசலேமே
பரிசுத்த நகரமே எருசலேமே
நீ கர்த்தரின் சிங்காசனம் உனக்கு
விரோதமாய் யுத்தம் செய்பவர்
கர்த்தரின் கோபத்தால்
அழிந்திடுவார்
– எருசலேமே
எருசலேம் நகருக்காய்
ஜெபிப்பவர்கள்
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவார்
கடைசி நாளில் கர்த்தரின் பாதம் உன்
ஒலிவமலைமேல் வந்து நிற்குமே
– எருசலேமே