நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்

Erusalaem Erusalaem Unnai Sinaekippor Sukiththiruppaarkal

Fr. S. J. Berchmans

எருசலேம் எருசலேம் உன்னை

சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் உம்

அலங்கத்திற்குள்ளே சமாதானம்

அரண்மனைக்குள்ளே பூரண சுகம்

கர்த்தர் உன் மேல் மனம் இரங்குகிறார்

ஆதரவாய் எழுந்து நிற்கிறார்

தயை செய்யும் காலம் வந்தது குறித்த

நேரமும் வந்து விட்டது குறித்த

நேரமும் வந்து விட்டது

விழித்தெழு சீயோனே வல்லமையை தரித்துக்கொள்

– எருசலேம்

துரத்துண்ட இஸ்ரவேலரை

துரிதமாய் கூட்டிச் சேர்கின்றார்

சீயோனை திரும்ப கட்டுகின்றார்

மகிமையிலே காட்சியளிப்பார்

மகிமையிலே காட்சியளிப்பார்

விழித்தெழு சீயோனே வல்லமையை தரித்துக்கொள்

– எருசலேம்

பூமியின் ஜனங்களுக்குள்ளே

புகழ்ச்சியும் கீர்த்தியும் ஆவாய்

உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்

கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்

கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்

விழித்தெழு சீயோனே வல்லமையை தரித்துக்கொள்

– எருசலேம்