பாடல்
எந்தன் உயிரே கர்த்தரை துதி
Enthan Uyirae Karththarai Thuthi
Reegan Gomez
எந்தன் உயிரே கர்த்தரை துதி
எந்தன் உள்ளமே கர்த்தரை துதி – 2
அவர் செய்திட்ட நன்மைகளுக்காய் (2)
வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி (2)
பாவங்களை மன்னித்தார்
பரிசுத்த வாழ்வு தந்தார் – உன் -2
– அவர் செய்திட்ட
வியாதியின் நேரத்திலே
பூரண சுகமளித்தார்
– அவர் செய்திட்ட
நன்மையாம் ஈவுகளை
நாள்தோறும் உனக்குத் தந்தார்
– அவர் செய்திட்ட
கர்த்தர் செய்த உபகாரங்கள்
எண்ணி முடியாதவைகள் – நம்
– அவர் செய்திட்ட