நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்தன் தேவா எனக்கு இரங்குமே

Enthan Thaevaa Enakku Irangumae

Chandrasekaran

எந்தன் தேவா எனக்கு இரங்குமே

எந்தன் பாவகறைகள் போக்கிடுமே

உமது இரக்கத்தால் என் மீறுதல்

மன்னியுமே – 2

சுத்த இருதயம் சிருஷ்டியுமே

நிலையான ஆவிதனை

என் உள்ளத்தில் புதிதாக்குமே – 2

சந்தோஷ மகிழ்ச்சியும்

கேட்கும்படி செய்யுமே – 2

– எந்தன்

உமது சமூகத்தைவிட்டு என்னை

தள்ளாதிரும் தேவனே

உம் ஆவியை எடுக்காதிரும்

இரட்சண்ய சந்தோஷத்தை

திரும்ப தாருமே – 2

– எந்தன்

ஆண்டவரே என் உதடுகளை

திறந்தருளும் ஐயா

என் நாவு உந்தன் புகழ் பேசட்டும் – 2

உடைந்த உள்ளமாய்

உம் பாதம் வந்தேனையா – 2

– எந்தன்