பாடல்
எந்தன் பூமானைக் காண
Enthan Poomaanaik Kaana
எந்தன் பூமானைக் காண
சிந்தை பொருகுதையோ
என்றைக்கு காண்பேனோ ஓ…. ஓ….
சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும்
எந்தன் பூமானைக்காண – அழகுடைய
அண்ணல் இயேசுவைக் காண ஓ…
– எந்தன்
விண்ணிலிருந்தவர் மண்ணீன் மேல்
வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர்
லாசருக்காகக் கண்ணீரை விட்டழுதவர்
– எந்தன்
இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ
சொன்ன வாக்கை நினைத்து – அடியேன்
உந்தன் பாதம் பணிந்து வந்தேன்
– எந்தன்
பொல்லாதோரை இரட்சிக்க வல்ல
பராபரன் என்ன துயரடைந்தார் – அதை
நினைத்தால் சொல்ல முடிவதில்லை
– எந்தன்
பாதகரின் அடி கன்னத்தில் படும் வேளை
என்னை நினைத்தீரே நீர் – அதை
நினைத்தால் உம்மை மறப்பேனோ நான்
– எந்தன்