நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும்

Enthalai Thannnneerum En Kannkal Kannnneerum

Lucas Sekar

என்தலை தண்ணீரும்

என் கண்கள் கண்ணீரும்

இருந்தால் நலமாகுமே (2)

கெத்சமனின் பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே

இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே

(2) – என் தலை

கோடான கோடி அழிகின்ற ஜனங்களை

மீட்டிட கண்ணீர் நதிபோல் பாயட்டும் (2)

– என் தலை

இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை

கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணும் (2)

– என் தலை

பாரத தேசத்தின் பாவ சாபங்களுக்காய்

பெருமூச்சு விட்டு கதறி ஜெபிக்கணும் (2)

– என் தலை