நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்த சூழ்நிலையிலும்

Entha Soolnilaiyilum

Moses Rajasekar

எந்த சூழ்நிலையிலும்

எப்பேர்பட்ட நேரத்திலும்

மனரம்மியமாய் இருக்க

நான் கற்றுக்கொண்டேன் – 2

போதுமென்ற மனதுடனே தேவபக்தியுடனே

மனரம்மியமாய் இருக்க

நான் கற்றுக்கொண்டேன் – 2

அத்திமரம் துளிர் விடாமல்

போனாலும்

திராட்சை செடி பலன்

கொடாமல் போனாலும் – 2

தொழுவத்தில் மந்தைகள்

இல்லாமல் போனாலும்

மனரம்மியமாய் இருக்க

நான் கற்றுக்கொண்டேன் – 4

– எந்த சூழ்நிலையிலும்

உற்ற பின்பு உதறி

தள்ளி போனாலும்

பெற்ற அன்பு என்னை

விட்டு போனாலும் – 2 – ஓஹோ

நண்பர்கள் கூட்டம் என்னை

விட்டு விலகிப் போனாலும்

மனரம்மியமாய் இருக்க

நான் கற்றுக்கொண்டேன் – 4

– எந்த சூழ்நிலையிலும்

சொத்து சுகம் என்னை

விட்டு போனாலும்

பந்த பாசம் என்னை விட்டு

பிரிந்தாலும்

எத்தனை வார்த்தைகளால்

இழித்து பேரி திரிந்தாலும்

மனரம்மியமாய் இருக்க

நான் கற்றுக்கொண்டேன் – 4

– எந்த சூழ்நிலையிலும்