நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எண்ணில்லாத நன்மைகளை

Ennnnillaatha Nanmaikalai

Reegan Gomez

எண்ணில்லாத நன்மைகளை

எந்தன் வாழ்வில் செய்தவரே

என்னச் சொல்லி நான் பாடுவேன்

உம் அன்பை

சேற்றில் இருந்து தூக்கி எடுத்தீர்

சேதமின்றி காத்து கொண்டீர்

நன்றி பாடல் எந்தன் நாவினில் தந்தீர்

நன்றி எந்தன் இயேசு ராஜனே – 2

– எண்ணில்லாத

அமைதி நிறைந்த இதயம் தந்தீர்

அக மகிழ்ந்து உம்மை பாட வைத்தீர்

அப்பா உம் நேசம் எத்தனை பெரிது

அளவிட முடியா அலைகடல் போன்றது

– எண்ணில்லாத

ஏற்ற வேளை நன்மை செய்தீர் போற்றி

உம்மை புகழ்ந்திடுவேன்

வற்றாத ஊற்றாய் என் உள்ளம் வந்தீர்

பற்றிக் கொள்வேன் என்றும் உம்மையே

– எண்ணில்லாத