நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

Ennaip Pelappaduththum Yesu Kiristhuvaal

Fr. S. J. Berchmans

என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்

கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்

அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்

அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்

– என்னைப்

தீயோர் என் உடலை விழுங்க நெருக்குகையில்

இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்

இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்

– என்னைப்

படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்

என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது

என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது

– என்னைப்

கேடு வரும் நாளிலே கூடார மறவினிலே

மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்

மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்

– என்னைப்

எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்

என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார்

என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார்

– என்னைப்

அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்

பாடல் பாடிடுவேன் நடனமாடிடிவேன்

பாடல் பாடிடுவேன் நடனமாடிடிவேன்

– என்னைப்

நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்

இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்

இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்

– என்னைப்