பாடல்
என்னை நடத்திடும் தேவா
Ennai Nadaththidum Thaevaa
Lucas Sekar
என்னை நடத்திடும் தேவா
ஒவ்வொரு நாளும் உம் கரத்தால் (2)
சிறகு உடைந்த பறவை போல்
தள்ளாடி தடுமாறி நடக்கின்றேன் (2)
தாங்குமைய்யா உம் வல்லமையால்
தாங்குமைய்யா உம் கிருபையால் (2)
– என்னை
உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
நித்திய ஜீவன் அளிப்பவரே (2)
ஜீவனுள்ள வார்த்தைகள்
உம்மிடம் தானுண்டு (2)
– என்னை
உம்மை பிரிக்கும் பாவங்களை
மேற்கொள்ள தேவா பெலந்தாருமே (2)
போராட்டமான உலகினிலே
போராடி ஜெயம் பெற (2)
– என்னை