என்னை காப்பவர்
Ennai Kaappavar
Thomas Prithvi
என்னை காப்பவர் மிகவும் நல்லவரே
என்னை காப்பவர் சர்வ வல்லவரே
என்னை காப்பவர் உறங்குவதில்லையே
என்னை காப்பவர் கைவிடுவதில்லையே
என்னை காப்பவர் தள்ளாடவொட்டாரே
காத்தவர் காப்பாரே கருணையாலே
காத்தவர் காப்பாரே அன்பினாலே
வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்
வழிகாட்டி என்னை மீட்டுக்காத்தீரே
உங்க அன்பு பெரியது
உங்க கிருபை பெரியது என்னை
வழிநடத்தும் என் மேய்ப்பர் நீரே
– என்னை
பாவ சாபத்தில் சிக்கின என்னை – உம்
இரத்தம் சிந்தி மீட்டுக் காத்தீரே
உங்க அன்பு பெரியது
உங்க கிருபை பெரியது என்
இரட்சகர் இயேசு நீரே
– என்னை
சுகமில்லாமல் துன்பப்பட்டேன் உம்
வார்த்தையை அனுப்பி வாழவைத்தீரே
உங்க அன்பு பெரியது
உங்க கிருபை பெரியது என்
பரிகாரி கர்த்தர் நீரே
– என்னை
தரித்திரனாய் இருந்த என்னை பெரும்
சீமானாய் மாற்றி மகிழ்ந்தீரே
உங்க அன்பு பெரியது
உங்க கிருபை பெரியது என்
ஐசுவரிய சம்பன்னர் நீரே
– என்னை