நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே

Ennai Alaiththavarae Ennai Thottavarae

Benny Joshua

என்னை அழைத்தவரே

என்னை தொட்டவரே

நீர் இல்லாமல் நான் இல்லையே நான்

வாழ்ந்தது உங்க கிருபை நான்

வளர்ந்ததும் உங்க கிருபை என்னை

உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே

உங்க கிருபை வேண்டுமே உங்க

கிருபை போதுமே உங்க

கிருபை இல்லாம நான்

ஒன்றுமில்லை இயேசுவே

தனிமையில் அழுத போது தேற்றிட யாருமில்லை

தள்ளாடி நடந்த போது தாங்கிட யாருமில்லை

கதறி அழுத நேரத்தில் என்

கண்ணீர் துடைத்திடும் கிருபை உங்க

கிருபை இல்லேன்னா நானும் இல்லை

– உங்க கிருபை

நானென்று சொல்ல எனக்கொன்றும் இல்லை

திறமை என்று சொல்ல என்னிடம் எதுவும் இல்லை

தகுதியில்லா என்னை

உயர்த்தினது உங்க கிருபை உங்க

கிருபை இல்லேன்னா நானும் இல்லை

– உங்க கிருபை