நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை அழைத்தவர்

Ennai Alaiththavar

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

அன்பின் வாக்குத் தத்தங்களை தந்தவர்

எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்

என்றும் உன்னை (என்னை) நடத்திடுவார்

தடைகள் உன் பாதையிலே

பெருந்துன்ப வேலைகளில்

பதறாமல் இயேசுவை நம்பு (2)

புதுப்பாதை திறந்திடுவார்

– என்னை

நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்

செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை

சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்

அவர் சமூகம் உள்ளதினால்

– என்னை

கடல் அலை போல் துயரங்கள் சூழ்ந்தாலும்

தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்

உந்தன் அருகில் இயேசு வருவார்

விசுவாசத்தால் அவரைத் தொடு

– என்னை