நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை ஆளாக்கி பார்க்கும் இந்த வேதம்

Ennai Aalaakki Paarkkum Intha Vaetham

Moses Rajasekar

என்னை ஆளாக்கி பார்க்கும் இந்த

வேதம்

என்னை மனிதனாக மாற்றிய இந்த

வேதம்

வேதம் அறிய வேதம்

போதும் இதன் பாதம் – 2

இரவும் பகலும் இதனின் தியானம்

இதுவே எந்தன் தேவ ஞானம்

இதனால் எனக்கு கிடைத்ததிந்த கானம் – 2

– வேதம் அறிய

தேனினும் இனிமையான வேதம்

தெவிட்டாத மதுரமான வசனம் – 2

அவை ஏழு தரம் புடமிடப்பட்ட சொற்கள்

ஏற்ற காலத்தில் பொன் தட்டில் வைத்த கற்கள் – 2

– இரவும் பகலும்

என் கால்களுக்கு தீபம் எந்தன் வேதம்

என் பாதைக்கு வெளிச்சமான வசனம் – 2

அது வாலிபனின் வழியை சுத்தம் பண்ணும்

வயோதிபரை ஞானவான் களாக்கும் – 2

– இரவும் பகலும்

அது கணுக்களையும் அணுக்களையும் பிரிக்கும்

இதயத்தின் நினைவுகளை வரையறுக்கும்

ஆவி ஆத்மா சரீரம் உருவாக்கும் – வேதம்

இருபுறமும் கருக்குள்ள பட்டயம் – இரவும் பகலும்

– வேதம் அறிய