பாடல்
என்ன தியாகம் என் கல்வாரி நாயகா
Enna Thiyaakam En Kalvaari Naayakaa
என்ன தியாகம் என் கல்வாரி நாயகா
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ
விண் தூதர் போற்றிடும் உம்
பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா
மானிடர் மேல் அன்பினால்
– என்ன தியாகம்
ஜெனித்த நாள் முதலாய்
கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய் கண்டீரையா
பாவியை மீட்பதற்காய்
– என்ன தியாகம்
தலையைச் சாய்த்திடவோ
உமக்கு ஓர் ஸ்தலமோ எங்குமில்லை
உம் அடிசுவட்டில் நான் செல்லவே
முன் பாதைக் காட்டினீரே
– என்ன தியாகம்
பாடுகளல்லவோ உம்மை
மகிமையில் பூரணமாய் சேர்ந்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்
என் ஜீவனையும் வைத்தே
– என்ன தியாகம்
இன்பம் எனகினியேன் என் அருமை
இயேசு தான் என் பங்கல்லோ
நேசரின் பின்னே போகத் துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்
– என்ன தியாகம்