நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்ன எனக்கு இல்லாமற் போனாலும்

Enna Enakku Illaamar Ponaalum

Moses Rajasekar

என்ன எனக்கு இல்லாமற் போனாலும்

உம் கிருபை எனக்குப் போதும் ஐயா

அன்னம் தண்ணி ஆகாரம் இல்லமற் போனாலும்

உம் மகிமை எனக்குப் போது ஐயா –

என் இயேசு நாதா

– என்ன எனக்கு

சுற்றத்தாரும் உற்றத்தாரும்

எனை மறந்தாலும்

நீர் என்னை மறப்பதில்லையே – 2

தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும் – 2

உள்ளங்கையில் எனை வரைந்தீரே

உம் மகனா(ளா)ய் மாற்றி விட்டீரே

– என்ன எனக்கு

சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து

பட்டினியாகக்கிடக்கும்

உம்மை நம்பினோடுக்குக்

குறைவு இல்லையே – 2

எளியவனை நீர் மறப்பது இல்லை – 2

நம்பினோரைக் கைவிடுவதில்லை

அவன் உம்மை விட்டு விலகுவதில்லை

– என்ன எனக்கு

உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும்

அன்பை என்னில் பிரிப்பதில்லையே – 2

மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும்

நீர் இன்றி எவருமில்லையே

உம் துணையின்றி வாழ்வு இல்லையே

– என்ன எனக்கு