நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எங்கள் தகப்பனே

Engal Thakappanae

Moses Rajasekar

எங்கள் தகப்பனே எங்கள்

தந்தையே வாரும்

நாங்கள் கூடும் நேரத்தில் – 2

மந்தை சேரா ஆடுகள் போல

சிதறி நாங்கள் திரிவது ஏனோ – 2

ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே

தாகம் தீர்க்க வாருமையா – 2

– எங்கள் தகப்பனே

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்

கர்த்தாவே எங்கள் குரலைக்

கேட்க வாருமே – 2

ஆற்றலின் உறவே அபிஷேகமே

ஆற்றிட வாருமையா – 2

– எங்கள் தகப்பனே

உன்னதமான உயர்வின் உறவே

சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே – 2

பலத்த துருகமே நங்கூரமே

ஆபத்தில் என் கேடகமே – 2

– எங்கள் தகப்பனே