நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்

Engaeyaakinum Svaami Engaeyaakinum

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்

அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்

பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்

பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்

– எங்கேயாகினும்

வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்

போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே

– எங்கேயாகினும்

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்

பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்

– எங்கேயாகினும்

எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்

எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்

– எங்கேயாகினும்

உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா

மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே

– எங்கேயாகினும்

தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து

சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்

– எங்கேயாகினும்

ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா

ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்

– எங்கேயாகினும்