எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
Enakku Naeram Kitaikkum Pothellaam
Moses Rajasekar
எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
என் இயேசுவோடு நான் பேசுவேன் – 2
நான் பேசுவேன் அவர் பேசுவார்
இருவரும் சந்தோஷிப்போமே – 2
ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்
அருகில் வந்தெனக்கு உதவி செய்வார் – 2
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன் – 2
இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார் - 2
– எனக்கு நேரம் – அல்லேலூயா – 12
ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன்
ஆவியின் அபிஷேகம் தந்திடுவார் – 2
அந்நிய பாஷையில் நிரப்பிடுவார் – 2
அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார் – 2
– எனக்கு நேரம் … அல்லேலூயா –12
அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன்
முந்தி வந்து எனக்கு அவர் உதவி செய்வார் – 2
சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன் – 2
சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன் – 2
– எனக்கு நேரம் – அல்லேலூயா – 12
உற்சாகமாய் கர்த்த்ருக்குக் கொடுத்திடுவேன்
இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன் – 2
ஜீவனின் அதிபதியானவரை – என் – 2
ஜீவய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்
– எனக்கு நேரம் – அல்லேலூயா