பாடல்
எனக்கொரு நேசர் உண்டு
Enakkoru Naesar Unndu
Pastor K. S. Wilson
எனக்கொரு நேசர் உண்டு
அவர் தான் ஏசு ராஜா
எனக்கொரு புகலிடம் உண்டு
அவர் தான் ஏசு ராஜா
அவர் நல்லவர்
சர்வ வல்லவர்
அன்பு நிறைந்தவர்
என் வேதனைகளை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரையும் அவர் காண்கிறார்
ஏற்ற நேரத்தில் பதிலை தருகிறார்
– அவர் நல்லவர்
அவர் செட்டையின் நிழலில் ஆறுதலே
அவர் சட்டையின் மறைவில் ஆரோக்கியமே
ஏற்றா நேரத்தில் சுகத்தை தருகிறார்
– அவர் நல்லவர்
அவர் இடது கை என் தலையில் கீழிருக்கும்
அவர் வலது கரத்தினால் என்னை அணைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் ஆறுதல் செய்கிறார்
– அவர் நல்லவர்
என் அலைச்சல்களை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரை கணக்கிலே வைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் உதவி செய்கிறார்
– அவர் நல்லவர்