நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எனக்காகவே யாவையும்

Enakkaakavae Yaavaiyum

Chandrasekaran

எனக்காகவே யாவையும்

செய்து முடித்தீர்

நன்றி நன்றி ஐயா

என் பாவங்கள் யாவையும்

சுமந்து கொண்டீரே

நன்றி நன்றி ஐயா

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்

அதிகமாக தருபவரே – 2

நான் எனது பிள்ளைக்கு

நல்ல ஈவை கொடுக்கிறேன்

பரம பிதா அதைப் பார்க்கிலும்

கொடுத்திடுவாரே – 2

– நினைப்பதற்கும்

அன்றாடம் வேண்டிய

ஆகாரம் தாருமே

தீமை என்னை அணுகாமல்

காக்கும் தேவனே

– நினைப்பதற்கும்

ஆபிரகாமை அழைத்தீரே

ஆசீர்வாதம் கொடுத்தீரே

அதுபோல என்னையும்

ஆசீர்வதியும்

– நினைப்பதற்கும்