பாடல்
என் இயேசுவே உம் மார்பினில்
En Yesuvae Um Maarpinil
Reegan Gomez
என் இயேசுவே உம் மார்பினில்
சாய்ந்து இளைப்பாறுவேன்
அன்பான சீடன் போல
உம் மார்பில் சாய்கிறேன்
கவலை கஷ்டம் கண்ணீரெல்லாம்
மறந்து வாழ்கிறேன்
– என் இயேசுவே
பேரின்ப நதியினால்
என் தாகம் தீருமையா
ஜீவத்தண்ணீர் என் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
– என் இயேசுவே
உம்மைப் பார்க்கிறேன்
உம் சாயலாகின்றேன்
உள்ளத்தில் வாசம் செய்பவரே
உமக்கே ஆராதனை
– என் இயேசுவே
பரம தேசம் நோக்கி
பயணம் தொடர்கின்றேன்
பாடுகள் சகித்த பரமனை
கண் முன்னே நிறுத்தியுள்ளேன்
– என் இயேசுவே