பாடல்
என் விருப்பம் என் ஆசை நீங்கதானைய்யா
En Viruppam En Aasai Neengathaanaiyyaa
Albert Solomon
என் விருப்பம் என் ஆசை நீங்கதானைய்யா
நீர் இல்லாத வாழ்க்கை நினைச்சு பார்க்க முடியல
தந்தையைப் போல சுமக்கின்றீர்
தாயைப்போல தேற்றுகின்றீர்
நீங்க இல்லாமல் வாழ முடியாதே
இயேசைய்யா என் இயேசைய்யா
நீங்க மட்டும் போதும் இயேசைய்யா
உளையான சேற்றிலே தவித்த என்னையும்
தூக்கி எடுத்து என்னை துதிக்க செய்தீரே
– இயேசைய்யா….
உம்மைத் தேடாமல் மறந்த போதெல்லாம்
நீரோ என்னை மறக்கவில்லையே
– இயேசைய்யா….
மனிதர் வாக்குகளை மறந்துப் போனார்கள்
நீரோ வாக்குகளை மறக்கவில்லையே
– இயேசைய்யா….