பாடல்
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
En Vaalvin Aanantham Neerae
Reegan Gomez
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும் எனக்கு நீரே
உம்மை கண்ணில் வைத்தே
உலகை மறந்து போனேன்
பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரே
மாறாத நம்பிக்கையும் நீரே
மாறிப் போகிடும் மானிடர் உண்டு
மாறிடாத இம்மானுவேல் நீரே
N ...என் வாழ்வின்
மனதின் பாரங்கள் நெருக்கும் நேரத்தில்
மன்னவா உம் பாதம் சேருவேன்
திருவாய் மொழிகள் கேட்கும் வேளையில்
மனத்துயரம் மறைந்து போகுதே
– என் வாழ்வின்
ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர்
அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையில்
மகிழ்வோடு நான் வாழ்வேன்
– என் வாழ்வின்