பாடல்
என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே
En Ullamellaam Vaanjikkuthae
என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
உம்மை வாஞ்சிக்குதே
மானானது நீரோடையை வாஞ்சித்து கதற்வது போல
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே
– என் உள்ளமெல்லாம்
உம்மோடு நான் உறவாடியே ஆவியில் மகிழ்ந்து துதிக்க
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே
– என் உள்ளமெல்லாம்
பரலோகத்தின் மகிமையை ரசித்து ருசித்து உணர
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே
– என் உள்ளமெல்லாம்