பாடல்
என் தனிமையில் என் வேதனையில்
En Thanimaiyil En Vaethanaiyil
Augustin Rajasekar
என் தனிமையில் என் வேதனையில்
நீர் ஒருவரே என்னை தாங்கினீர்
என் துயரத்தில் என் அழுகையில்
நீர் ஒருவரே என்னை தேற்றினீர் (2)
உம்மைப்போல் யாருண்டு என் நேசரே
என் இயேசுவே(2)
என் உறவுகள் என்னை மறந்தாலும்
நீர் ஒருவரே என்னை அணைப்பீரே
என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும்
நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர் (2)
– உம்மைப்போல்
என் பாவத்தை என் சாபத்தை
நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே
உம் பிள்ளையாய் என்றும் உம்முடன்
உம் வீட்டிலே என்றும் தங்குவேன் (2)
– உம்மைப்போல்