பாடல்
என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா
En Thaevanaik Kaana Nee Kalvaarikku Vaa
Pastor K. S. Wilson
என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா
என் இயேசுவைக் காண நீ கல்வாரிக்கு வா- 2
காடுகளெல்லாம் மேடுகளெல்லாம்
குன்றுகளெல்லாம் நீ அலைய வேண்டாம் – 2
தேடிட வேண்டாம் உன் தெய்வங்களை நீ – 2
தேடி வந்தாரே உன் நேசர் இயேசுவே
– என் தேவனை
ஆடுகள் வேண்டாம் மாடுகள் வேண்டாம்
பறவைகள் வேண்டாம் உன் பொருளும் வேண்டாம் – 2
பணமும் வேண்டாமே உன் மனமது வேண்டும் – 2
இறைவன் தந்திடும் ஆலயம் அதுவே
– என் தேவனை
படிப்பும் வேண்டாம் பட்டமும் வேண்டாம்
வயதும் வேண்டாம் ஒரு வரம்பும் வேண்டாம் – 2
பெலமும் வேண்டாம் உயர்குலமும் வேண்டாம் – 2
இயேசு உன்னையும் தேடுகின்றாரே
– என் தேவனை