பாடல்
என் பிரியமே கலங்காதே
En Piriyamae Kalangaathae
Albert Solomon
என் பிரியமே கலங்காதே
நான் உன்னை நேசிக்கிறேன்
உன் ஸ்நேகத்தால் ஸ்நேகித்து
ஆதரவாய் இருப்பேன்
இஸ்ரவேல் கன்னிகையே உன்னை
மீண்டும் நான் கட்டுவிப்பேன்
மேள வாத்தியத்தோடும் ஆடல் பாடலோடும்
மீண்டும் மகிழ்ச்சிக்கொள்ளுவாய்
– என் பிரியமே
இஸ்ரேலே பயப்படாதே உன்னை
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
உன்னை வாலாக்காமால் உன்னை தலையாக்குவேன்
கீழாகாமல் மேலாவாய்
– என் பிரியமே
இஸ்ரேலே கலங்கிடாதே உன்னை
ஆசிர்வதிப்பது என் பிரியம்
அன்றே பாகமில்லை குறி சொல்லுதல் இல்லை
ஆசிர்வாதமாய் இருப்பாய் (நீ) (2)
– என் பிரியமே