நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் பாட்டுக்குள் ஒரு ராகம் இருக்கு

En Paattukkul Oru Raakam Irukku

Moses Rajasekar

என் பாட்டுக்குள்

ஒரு ராகம் இருக்கு

சொல்லி தெரியுமா – அந்த

இராகத்துக்குள் சோகமுண்டு

சொல்லி புரியுமா – 2

சுனாமி… சுனாமி

ஏழை மக்களையே

வாரிப் போன பினாமி – 2

படுத்துறங்கின பிஞ்சுகள்

பகலப் பார்க்கவில்லை

பகலவன் ஒளியும் கூட

உலகில் தெரியவில்லை – 2

படுத்த பாய் கூட ஜனங்கள்

மடிச்சிப் போடவில்லை – 2

பாழாப்போன கடலு

அள்ளிப்போனதய்யா உள்ளே – 2

– சுனாமி

மலைபோல மனிதர்களை

வாழ வைத்த கடலே

உளையாய் நொடிப்பொழுதில்

உருக்குலைத்த கடலே – 2

செழிப்பாக மக்களை வாழ

வைத்த கடலே – இப்ப

தெருவெங்கும் பிண வாடயை

வீச வைத்த கடலே – 2

– சுனாமி

தேவனின் கோபமிதோ

என்று தோணுதே

திருந்தினால் மனித வாழ்வு உயருமெங்குதே – 2

காலமோ கடைசி என்று சூழல் சொல்லுதே – 2

இனியொரு சுனாமி வேண்டாம் எந்தன் சாமி

இனியொரு சுனாமி தாங்காது பூமி

– சுனாமி