பாடல்
என் பாதைகள் யார் அறிவார்
En Paathaikal Yaar Arivaar
என் பாதைகள் யார் அறிவார்
என் தேவனைத் தவிர
என் வழிகள் யார் அறிவார்
என் இயேசுவைத் தவிர
மனிதனோ முகத்தைப் பார்க்கிறான்
என் தேவனோ இதயத்தைப் பார்க்கிறார் – 2
எதையும் எதிர்பாராத தேவன் இயேசு
அவர் என்னோட கூட நடந்து வருகிறார் – 2
– என் பாதைகள்
பாதையிலே பல வாதைகள்
என் தேவனோ கிருபையாய் தாங்கினார் – 2
தேவன் காட்டும் பாதை எல்லாம் நன்மை – என்
அவர் நிழல் மறைந்து வாழ்வேன்
இது உண்மை – 2
– என் பாதைகள்