நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் நம்பிக்கையின் காரணம் நீரே

En Nampikkaiyin Kaaranam Neerae

Reenu Kumar

என் நம்பிக்கையின் காரணம் நீரே

என் வாழ்வின் அர்த்தம் நீரே

என்னை ஆளுகை செய்பவர் நீரே

உம்மை புகழ்ந்து பாடிடுவேனே

உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்

ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்

முதலும் நீரே முடிவும் நீரே

துவங்கியதை முடிப்பவர் நீரே

கடலின் மேலே நடந்து

கரை சேர்ப்பவரும் நீரே

உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்

ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்

– என் நம்பிக்கையின்

சொன்னதை செய்யும் உன்னதர் நீரே

வாக்கு மாறா உத்தமர் நீரே

கூப்பிட்ட நேரத்தில் எல்லாம்

செவிக் கொடுப்பவரும் நீரே

உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்

ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்

– என் நம்பிக்கையின்