நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் நம்பிக்கை உமக்கு ஸ்தோத்திரம்

En Nampikkai Umakku Sthoththiram

Bishop Gnanaprakasam

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்

உம்மை தான் நான் நம்பியிருக்கேன்

அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா

– என் நம்பிக்கை

நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன்

அற்புதங்கள் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க

மனிதர்கள் முன்பாக தலைக்குனிந்து போகாமல்

உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க

– உம்மைத் தான் நான் …..

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே

அற்புதங்கள் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க

இரட்டிப்பான நன்மைகளை தருவேன் என்று சொன்னீரே

இன்னைக்கே தந்திடுங்க இப்பவே தந்திடுங்க –

உம்மைத் தான்

உம்மையல்லாமல் யார் என்னை உயர்த்தக்கூடும்

அற்புதங்கள் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க

ஐஸ்வர்யம் பணமுமே உம்மால் தான் வருகிறது

ஆளுகை செய்யுங்கப்பா மேன்மை படுத்துங்கப்பா

– உம்மைத் தான்