பாடல்
என் நேசர் நீர்தானையா
En Naesar Neerthaanaiyaa
Reegan Gomez
என் நேசர் நீர்தானையா
நேசிக்கின்றேன் உம்மைத்தானே – 2
எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா-2
எந்தன் படுக்கையிலும்
உம்மை நினைக்கின்றேன்
நடு இராவிலும் தியானிக்கின்றேன்-2
– என் நேசர்
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீர்
நன்றி இயேசையா
உந்தன் அன்பாலே எந்தன்
உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே
– என் நேசர்
துன்பமோ துயரமோ நீரே
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிர் உள்ளவரை
உம்மைத்தான் நேசிப்பேன்
வேறேதற்கும் நான் அடிமைப்படேன்
– என் நேசர்