நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் நேசர் என்னுடையவர்

En Naesar Ennutaiyavar

Pastor K. S. Wilson

என் நேசர் என்னுடையவர் நான்

என்றென்றும் அவருடையவன்

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

என்னையும் கவர்ந்து கொண்டவரே

தம் நேசத்தால் – என்னையும்

கவர்ந்து கொண்டவரே

அவர் வாயின் முத்தங்களால்

என்னை அனுதினமும் முத்தமிடுகிறார்

– சாரோனின் ரோஜா

திராட்சை ரசத்திலும் உங்க நேசமே

அது இன்பமும் மதுரமுமானது

– சாரோனின் ரோஜா

அவர் முற்றிலும் அழகுள்ளவர்

இவரே என் சிநேகிதர்

– சாரோனின் ரோஜா

விருந்து சாலைக்குள்ளே என்னை அழைத்து

செல்கிறார் – என்மேல் பறந்த கொடி நேசமே

– சாரோனின் ரோஜா