நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் மனதில் உள்ள ஏக்கங்களை

En Manathil Ulla Aekkangalai

Chandrasekaran

என் மனதில் உள்ள ஏக்கங்களை

நிறைவேற்றுங்கப்பா

என் சரீரத்திலே உந்த நாமம்

உயர்த்த துடிக்கிறேன்

உங்களுக்காக எதையோ

ஒன்றை செய்யத்தானே துடிக்கிறேன்

வாழ்க்கையிலே வருகின்ற தடைகள்

நினைத்து தவிக்கிறேன்

– ஆமேன்

ஆதியிலே நீங்க செய்த

அற்புதங்கள் நினைக்கின்றேன்

அதைபோல நானும் இன்று

செய்யத்தானே துடிக்கிறேன்

– ஆமேன்

கோடாகோடி ஜனங்கள் ஓடி

உந்தன் பாதம் வரணுமே

சீக்கிரம் உம் வருகையிலே

ஆயத்தமாக நிக்கணுமே

– ஆமேன்