நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் மேய்ப்பரே யாவே ரோஹி

En Maeypparae Yaavae Rohi

Thomas Prithvi

என் மேய்ப்பரே யாவே ரோஹி என்

மேய்ப்பரே யாவே ரோஹி என்

மேய்ப்பரே யாவே ரோஹி என்

மேய்ப்பரே என் மேய்ப்பரே நல்

மேய்ப்பரே

எனக்கெந்த குறையும் இல்லையே என்

மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே

நடத்துகிறிரே புல்லுள்ள இடங்களிலே

கொண்டு செல்கிறீரே அமர்ந்த

தண்ணீர் அண்டையிலே

– என் மேய்ப்பரே

என் ஆத்துமாவை என்றும் தேற்றுகிறீர்

என்னை நீதியின் பாதையில் நடத்துகிறீர்

பயப்படேனே மரணப் பள்ளத்தாக்கிலே

தேவரீரே என்னோடு இருக்கிறீரே

– என் மேய்ப்பரே

உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும்

அது என் எதிரியிடமிருந்து என்னைக் காக்கும்

ஆயத்தம் பண்ணிணீரே நீர் ஒரு பந்தியை

என் சத்துருக்களுக்கு முன்பாக

என்னை உயர்த்திட

– என் மேய்ப்பரே

என் தலையை எண்ணெய்யால் அபிஷேகித்தீர்

என் பாத்திரம் நிரம்பி வழிகிறதே

நன்மையும் கிருபையும் என்றென்றும் தொடருமே

கர்த்தரின் வீட்டிலே என்றும் நிலைத்திருப்பேன்

– என் மேய்ப்பரே