பாடல்
என் கால்கள்
En Kaalkal
Reegan Gomez
என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
கர்த்தவே உம் அன்பு தாங்குதையா
ஆறுதல் நீர் தானையா
அடைக்கலம் நீர் தானையா
என் ஆறுதல் நீர் தானையா
அடைக்கலம் நீர் தானையா
உள்ளம் கலங்கும் நேரமெல்லாம்
உந்தன் ஆறுதல் தேற்றுதையா – என் (2)
தாங்குகிறீர் தினம் நடத்துகிறீர்
தகப்பனே உம்மைத் துதிப்பேன்
– என் கால்கள்
மலைகள் குன்றுகள் விலகினாலும்
அப்பா உம் அன்பு மாறாதையா
உந்தன் கிருபை போதுமையா
எந்தன் பெலன் நீர் தானையா
– என் கால்கள்
ஜீவனை பார்க்கிலும் உம் அன்பு
மிகவும் மிகவும் உயர்ந்ததையா – என் (2)
காயங்கள் ஆற்றும் மருத்துவரே
கருணை நிறைந்தவரே – என் (2)
– என் கால்கள்