பாடல்
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை
En Janangal Orupothum Vetkappattu Povathillai
Sirkali Yesuprakasam
என் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டு போவதில்லை
கர்த்தருக்கு காத்திருப்போர் என்றும்
வெட்கப்பட்டு போவதில்லை
அழைத்தவர் உண்மையுள்ளவர்
உன்னை அனுதினம் நடத்திடுவார்
இஸ்ரவேலின் தேவன் பெரியவரே
வாக்கு மாறாதவரே
உனக்கு எட்டாததும் நீ அறியாததும்
பெரிய காரியங்கள் செய்திடுவார்
– என் ஜனங்கள்
சர்வ வல்ல தேவன் அற்புதரே
அதிசயமானவரே
நீ நினைப்பதற்கும் நாம் ஜெபிப்பதற்கும்
மேலான காரியங்கள் செய்திடுவார்
– என் ஜனங்கள்
நம்தேவன் நல்ல வைத்தியரே
மனதுருக்கம் நிறைந்தவரே
அவர் தழும்புகளால் உன்னை
குணமாக்கியே உன்னத
பெலனால் நிரப்பிடுவார்
– என் ஜனங்கள்