பாடல்
என் ஏக்கம் எல்லாம் உம்
En Aekkam Ellaam Um
Chandrasekaran
என் ஏக்கம் எல்லாம் உம்
சமூகத்தில் வாழ்வதே
என் ஆசை எல்லாம்
உம் சேவைதான் செய்வதே – 2
அழியும் ஜனங்கள் மனந்திரும்ப
அழுதுபுலம்பி ஜெபிக்கணுமே – 2
திறப்பின் வாசலிலே
நின்று ஜெபிக்கணுமே – 2
– என் ஏக்கம்
உமக்காய் பேச நாவு வேண்டும்
உம்மை போல அலைய
கால்கள் வேண்டும்
சத்தியம் சொல்லிடாத
இடங்கள் செல்லணுமே – 2
– என் ஏக்கம்
தேவனே இலங்கையை
இரட்சித்தருளும் இல்லையென்றால்
என் உயிரை எடும் – 2
யுத்தங்கள் வேண்டாமையா
இரட்சிக்க வேண்டுமையா
– என் ஏக்கம்