நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

En Aaththumaa Ummai Nnokki Amarnthirukkum

Joseph Aldrin

என் ஆத்துமா உம்மை நோக்கி

அமர்ந்திருக்கும் நான்

நம்புவது உம்மாலே ஆகும்

கன்மலையே அடைக்கலமே

என் பெலனே என்னை மீட்டவரே

கன்மலையே அடைக்கலமே

என் பெலனே என்னை காப்பவரே

அசைவுற விடமாட்டீர் - 2

(என்னை)

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்

என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

– அசைவுற

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே

சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

– அசைவுற

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்

நான் நம்புவது உம்மாலே ஆகும்

– அசைவுற