பாடல்
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள்
Elshadaay Enta Naamam Utaiyavar Engal
Lucas Sekar
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள்
மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2)
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2)
சகல ஜீவங்களும் வாழ்த்தி உம்மை பாடுது
சர்வவல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
– எல்ஷடாய் என்ற
ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்கியம் (2)
சர்வவல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
– எல்ஷடாய் என்ற
வானாதி வானகள் போற்றுகின்ற தெய்வம் நீரே
அகில உலகத்தையும் ஆளுகின்ற தெய்வம் நீரே
சர்வவல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
– எல்ஷடாய் என்ற
யார் உம்மை மகிமைபடுத்தாமல் இருக்கலாம்
தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் (2)
சர்வவல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
– எல்ஷடாய் என்ற