நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எல்லோருக்கும் மா உன்னதர்

Ellorukkum Maa Unnathar

எல்லோருக்கும் மா உன்னதர்

கர்த்தாதி கர்த்தரே கர்த்தாதி கர்த்தரே

மெய்யான தெய்வ மனிதர்

நீர் வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க நீர் வாழ்க இயேசுவே!

விண்ணில் பிரதானியான நீர்

பாவிகட்காகவே பாவிகட்காகவே

மண்ணில் இறங்கி மரித்தீர்

நீர் வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க நீர் வாழ்க இயேசுவே!

பிசாசு பாவம் உலகை

உம் சாவால் மிதித்தே

உம் சாவால் மிதித்தே

ஜெயித்தடைந்தீர் வெற்றியை

நீர் வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க நீர் வாழ்க இயேசுவே!

நீர் வென்றபடி நாங்களும்

வென்றேறிப் போகவே

வென்றேறிப் போகவே

பரத்தில் செங்கோல் செலுத்தும்

நீர் வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க நீர் வாழ்க இயேசுவே!

விண்ணோர்க்ளோடும் மண்ணுள்ளோர்

என்றைக்கும் வாழவே

என்றைக்கும் வாழவே

பரம வாசல் திறந்தோர்

நீர் வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க வாழ்க வாழ்க

வாழ்க நீர் வாழ்க இயேசுவே!