நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எல்லையில்லா உந்த அன்பால்

Ellaiyillaa Untha Anpaal

Moses Rajasekar

எல்லையில்லா உந்த அன்பால்

எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட

மன்னவா உமக்கு நன்றி - இயேசு

மன்னவா உமக்கு நன்றி

கள்ளமில்லா உந்தன் அன்பினால்

எனக்குள்ளதெல்லாம் மறந்தேன்

கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில்

என்னை நடத்தின விதம்தனை மறவேன்

நான் மறவேன் நான் மறவேன்

நான் மறவேன் நான் மறவேன் – 2

தொல்லை மிகுந்த உலகில்

இல்லை ஆறுதல் எனக்கு

அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் – என்னை

அணைத்திட்ட விதம்தனை மறவேன்

நான் மறவேன் நான் மறவேன்

நான் மறவேன் நான் மறவேன் – 2

சொல்லி முடியாது நாதா – உம் அன்பு

அள்ளித் தீராது தேவா

உள்ள உறுதியுடன் நானும் உம்

சமூகம் சேரும்வரை துதிப்பேன்

நான் துதிப்பேன் நான் துதிப்பேன்

நான் துதிப்பேன் நான் துதிப்பேன்– 2

நன்றி…. நன்றி…… நன்றி….. நன்றி…. – 8 – இயேசுவுக்கு

நன்றி…. நன்றி…… நன்றி….. நன்றி – ராஜாவுக்கு

அல்லேலூயா ஓசன்னா

அல்லேலூயா ஓசன்னா – 2

அல்லேலூ…அல்லேலூ….அல்லேலூ….அல்லேலூ…. – 8

அல்லேலூயா ஓசன்னா