பாடல்
எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்
Ellaarum Paaduvom Makilnthu Aaduvom
Bishop Gnanaprakasam
எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்
மன்னவன் பிறந்ததை பாடுவோம்
இம்மானுவேலனாய் எப்போதும் தங்கிட
வந்ததை எண்ணியே பாடுவோம் - அய்யா அம்மா
சமாதானம் தந்திட வந்தவர்
சாபத்தை முறித்திட வந்தவர்
துன்புறும் உள்ளத்தைத் தேற்றவே
தூயாதி தேவன் வந்தாரே – அய்யா அம்மா
– எல்லாரும்
பாவி என்று ஒருபோதும் தள்ளிடார் நம்
பாவங்களை மன்னிக்கவே வந்தாரே
வழுவாது காத்து என்றும் நடத்திட
வல்லவர் இயேசு வந்தாரே – அய்யா அம்மா
– எல்லாரும்
உலகத்தின் பாவத்தை போக்கவே இயேசு
உலகத்தின் இரட்சகராய் வந்தாரே
இருளான வாழ்வை என்றும் நீக்கிட
ஒளியாக இயேசு வந்தாரே – அய்யா அம்மா
– எல்லாரும்