நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எலியாவே எலியாவே

Eliyaavae Eliyaavae

Reegan Gomez

எலியாவே எலியாவே

சோர்ந்திடாதே சோர்ந்திடாதே

சூழ்நிலைகள் கண்டு நீயும்

சூரை செடி கீழே அமர்ந்தயோ

அழைத்தவர் நடத்திடுவார்

அதிசயங்கள் காட்டிடுவார்

தாகம் கொண்டு போஷித்த

கர்த்தர் உனக்குண்டு

ஒருநாளும் உன்னை கைவிடார்

விதவையை கொண்டு ஆதரித்தவர்

ஒருநாளும் உன்னை மறவார்

– அழைத்தவர்

மாந்தர்களின் வார்த்தையால்

மனம் தளர்ந்து

சோர்ந்து நீ போனாயோ

கலங்கிட வேண்டாம்

மனம் பதறிட வேண்டாம்

தெய்வ வார்த்தை உனக்கு உண்டு

– அழைத்தவர்

பலப்படுத்தும் நேசர்

உன்னை காண்கிறார்

புது பெலம் உனக்கு தருகிறார்

வீரம் கொண்டு தொடர்ந்து ஓடு

உன் பயணம் வெகு தூரம் உண்டு

– அழைத்தவர்