நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஈன புத்தி படைச்சவனே யூதாஸ்காரியோத்து

Eena Puththi Pataichchavanae Yoothaaskaariyoththu

Moses Rajasekar

ஈன புத்தி படைச்சவனே

யூதாஸ்காரியோத்து – இந்த

கோணபுத்தி எப்படி வந்தச்சு சொல்லு காரியோத்து – 2

காசுக்காக ஆசைப்பட்ட யூதாஸ் காரியோத்து – 2

இயேசுவை காட்டிக் கொடுத்தாயடா

யூதாஸ் காரியோத்து – 2

முந்தி முந்தி பேசித் திரிந்த சீமோன் பேதுரு – நீ

மூணு தடவை மறுதலிச்சது எப்படி பேதுரு? – 2

ஜாமக்கோழி கூவு முன்னே சீமோன் பேதுரு – 2

இயேசு அறியேன் என்று

சத்தியமடிச்ச சீமோன் பேதுரு – 2

– ஈனபுத்தி

நெஞ்சு மேல சாஞ்சுறங்கின

யோவான் அண்ணே – இப்ப

அஞ்சி ஓடி எங்கே மறைஞ்ச

யோவான் அண்ணே – 2

துண்டக் காணோம் துணியக் காணோம்னு

GM

ஓடின அண்ணே – 2 – இப்ப

துணிவு உனக்கு எங்கே போச்சு

சொல்லுங்க அண்ணே – 2

– ஈனபுத்தி

அஞ்சு அப்பம் ரெண்டு மீனு அந்திரேயாவே – இப்ப

தந்திரமா ஓடிப்போனது எங்கே ஐயாவே – 2

சொர்க்க வழியக் கேட்டுத் தொலைச்ச

பிலிப்பு அண்ணே – 2 – இப்ப

பக்க வழியா ஓடிப்போனது

எங்கேங்க அண்ணே – 2 –

ஈனபுத்தி

தோளு மேலே சாஞ்சுறாங்கீன

தோமா தாத்தாவே – இப்ப

ஏமாற்றும் மனிதர்களில் ஒருவனானாயே – 2

தழும்பு மேல கைவச்ச தோமா தாத்தாவே – 2 – இந்த

தரணி மீட்ட தேவ அன்பை

மறந்த தாத்தாவே – 2 –

ஈன புத்தி

ஆனாலும் நம்ம மேலே அன்பு வச்சு

இந்தத் தரணியிலே நல்லவராய் நன்மை செய்த

நம்ம இயேசு ஆண்டவராம்

நம்பு அவரை நம்பு

நம்பு அவரை நம்பு

தெம்பு அதுவே தெம்பு

நம்பு அவரை நம்பு